முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படைக்கு ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கி

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜன.25 -  இந்திய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா அளித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்கு பகுதியில் உள்ள மிரிமோரியே துறைமுகத்தில் இதற்கான விழா நடைபெற்றது. அதில் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ராவுடன், ரஷ்யாவின் யுனைடெட் கப்பல் கட்டுமான நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் நேர்பாவை நிறுவன தலைவர் இந்திய தூதரிடம் ஒப்படைத்தார். இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு ஐ.என்.எஸ். சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது. இது 10 ஆண்டு குத்தகை அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 90 கோடி அமெரிக்க டாலரை இந்தியா அளிக்கும். இதை தொடர்ந்து அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் வைத்துள்ள நாடுகள் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்சு, பிரிட்டன் ஆகிய நாடுகள் வரிசையில் 6 வது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்