பிரெஞ்ச் ஓபன்: 3வது சுற்றுக்கு முன்னேறிய பெடரர் - ஜோகோவிச்

வியாழக்கிழமை, 29 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

மாட்ரிட், மே, 30 - பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், ஜோகோவிச் ஆகியோர் 3ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

முன்னதாக நடந்த இரண்டாம் சுற்று போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அர்ஜென்டினாவைச் சேர்ந்த தகுதிநிலை வீரரான செபாஸ்டியனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பெடரர் வெற்றி பெற்றார். 2ம் நிலை வீரரான ஜோகோவிச் 6-1, 6-4, 6-2 என நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் ஜெரிமிசாண்டியை தோற்கடித்து 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

கனடாவின் மிலோஸ் ரோனிக், செக் குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச், குரேஷியாவின் மரீன் சிலிக், பிரான்சின் கில்லெஸ் சிமோன், ரஷ்ய வீரர் டிமிட்ரி டுர்சுனோவ் ஆகியோரும் 3ம் சுற்றுக்கு முன்னேறினர். 15ம் நிலை வீரர் மைக்கேஸ் யூஸ்னி 2ம் சுற்றில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

பிரெஞ்ச் ஓபன் நடப்பு சாம்பியன் செரினா வில்லியம்ஸ் 2ம் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசாவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 6-2, 6-2 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தினார். கார்பைன், தோல்வியை சற்றும் எதிர்பாராத செரீனா கண்ணீருடன் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். இதற்கு முன்னதாக நடந்த 2ம் சுற்றில் செரீனாவின் சகோதிரியான வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லொவாகியாவின் அன்னா ஸ்மெல்டோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அன்னா 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்தார். செரீனாவும், வீனசும் 2ம் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதால் 3வது சுற்றில் அவர்கள் இருவரும் நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, பாகிஸ்தான் வீரர் குரோஷி இணை 7-5, 6-7(4), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறியது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: