முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 வழக்குகளில் பாக்., முன்னாள் பிரதமர் கிலானிக்கு ஜாமீன்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஜூன் 19 - பாகிஸ்தானில்  12 ஊழல் வழக்குகளி்ல் குற்றம் சாட்டப்பட்டுள்ள  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2012 வரை பதவி வகித்தவர் கிலானி. இவருக்கு எதிராக 12 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கராச்சியில் ஊழல் தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் விசாரணையின்போது கிலானியும், முன்னாள் வர்த்தகத் துறை அமைச்சர் அமீன் பாஹியும் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் பிணையில்  வெளிவர முடியாத வாரண்டு உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. இLநால் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து  கிலானி நேரில் ஆஜரானார்.  அப்போது அவரது கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் 10-ம் தேதி  வரை ஜாமீன் வழங்கி கோர்ட்ட உத்தரவிட்டது. 

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்