முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. தலைவராக சீனிவாசன் தேர்வு: கவுன்சில் ஒப்புதல்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜூன் 27 - 52 உறுப்பினர்களை கொண்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது. ஐ.சி.சி. தலைவராக இந்திய கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சீனிவாசன் பி.சி.சி.ஐ.யின் தலைவர் பதவியில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஒதுங்கி இருந்தார். அவர் ஐ.சி.சி. தலைவராகவும் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து இருந்தது. இதனால் அவர் ஐ.சி.சி. சேர்மன் ஆவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு என். சீனிவாசன் பெயரை பி.சி.சி.ஐ. சமீபத்தில் பரிந்துரை செய்தது. ஐ.சி.சி.யின் விதிப்படி மாநாட்டுக்கு முன்னதாக இறுதியாக பரிந்துரை செய்வது அவசியம். இதன் காரணமாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து என். சீனிவாசந் பெயரை பரிந்துரைத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மாநாடு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் ஐ.சி.சி. தலைவராக என். சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஐ.சி.சி.யின் முதல் சேர்மனான அவர் நேற்று முதல் அந்த பொறுப்பில் இருந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு என். சீனிவாசன் ஐ.சி.சி. சேர்மனாக பணியாற்றுவார். ஐ.சி.சி.யின் புதிய நிர்வாக மாற்றம் அனைத்துக்கும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்