முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கம்

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.2 - தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எதிரொலியாக இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல் - அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்துக்கள் வெளியாகியிருந்தது. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பாக மிகவும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இழிவுப்படுத்தி விமர்சனம் செய்துள்ள இலங்கையுடனான உறவை இந்தியா கைவிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்த கட்டுரை இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்