ஆப்கனில் சங்க ஊழியர் 5 பேர் தீவிரவாதிகளால் கடத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், ஆக.18 - ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு பணியாற்றும் செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு மேர்கே ஹிராத் பிராந்தியத்தில் கடந்த 14-ஆம் தேதி பணிகளை முடித்து விட்டு வாகனத்தில் முகாமுக்கு திரும்பிய 5 செஞ்சிலுவை சங்க ஊழியர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க ஆப்கான் அரசு தக்க நடவடிக்கைகளை மேர்கொள்ள வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து ஹிராத் பிராந்திய கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஷபிக் நாங் ஷபி கூறுகையில் நாங்கள் இதுகுறித்து அ்பபகுதியில் செல்வாக்கு உள்ள பெரியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறோம்.

அவர்கள் தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்த, செஞ்சிலுவை சங்க ஊழியர்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: