முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் கால்பந்தாட்ட அணி கேப்டனாக நெய்மர் நியமனம்

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடிஜெனிரோ, செப்.7 - பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக 22 வயதேயான நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார். நெய்மர் தலைமையில் அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் என்று அந்த அணி பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் பிரேசிலுக்கு டி.சில்வா கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். பயிற்சியாளராக லூயிஸ் பெலிப் ஸ்கோலரி பதவி வகித்தார். அரையிறுதியில் அடைந்த படுதோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் மாற்றப்பட்டு துங்கா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அணியின் புதிய கேப்டனாக 22வயதேயான நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். துங்காவின் சிபாரிசை ஏற்று அந்த நாட்டு கால்பந்தாட்ட சங்கம் இம்முடிவை எடுத்துள்ளது. இன்று நடைபெற உள்ள கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் நெய்மர் தலைமையில் பிரேசில் களம் காண்கிறது.

இதுகுறித்து துங்கா நிருபர்களிடம் கூறுகையில், "கேப்டன் என்பவர் பிற வீரர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நெய்மரின் உத்வேகம் அணி முழுமையையும் தொற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன். அருமையான வீரர்களை கேப்டனாக கொண்டிருந்தபோதெல்லாம் பிரேசில் உலக கோப்பையை வென்று காண்பித்துள்ளது. எனவே 2018ம் ஆண்டு உலக கோப்பையை நெய்மர் தலைமையில் பிரேசில் வெல்லும்" என்றார்.

பிரேசில் கால்பந்தாட்ட வரலாற்றில் மிக சிறிய வயதில் கேப்டன் பொறுப்புக்கு வந்த முதலாவது வீரர் என்ற பெருமையை நெய்மர் தட்டிச் சென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago