எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
அமைச்சர், தங்கம் தென்னரசு:
பாலியல் வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்து உரிய தண்டனையும் பெற்றுத் தந்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பொதுச்சமூகம் மன்னிக்காது.
பா.ம.க., செயல் தலைவர், அன்புமணி:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும்வரை சிறை வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
காங்கிரஸ் தலைவர், செல்வ பெருந்தகை:
அரசியல்வாதிகளால் தாங்கள் காப்பற்றப்படுவோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது நீதிமன்றத்தித்தின் இந்த தீர்ப்பு.பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
வி.சி.க., தலைவர், திருமாவளவன்:
காயத்திற்கு இடப்படும் மாமருந்தாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு உள்ளது. இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறக் கூடாது என்பது இந்த தீர்ப்பு உதவும்.
அ.ம.மு.க., பொதுச்செயலாளர், தினகரன்:
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


