முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுமலை புலிகள் காப்பகத்தில் ரூ. 5 கோடி மதிப்பில் யானை பாகன்களுக்கு குடியிருப்பு : முதல்வர் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      தமிழகம்
CM-1 2023 05 13

Source: provided

ஊட்டி : நீலகிரி  மாவட்டத்திற்கு 5 நாள் பயணமாக வந்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட்டார்.  அங்கு பணிபுரியும் யானை பாகன்களுக்காக  சுமார் ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டிருந்த  44 வீடுகளை  திறந்து வைத்து அவர்களுக்கு  வழங்கினார்.

குடியிருப்பு பகுதியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார். தமிழகததின் பல்வேறு மாவட்ட  வனத்துறைக்கு 42 வாகனங்களை வழங்கினார். அங்கு பணிபுரியும்  யானைப்பாகன்களுடன் உரையாடினார். ஆஸ்கர் விருது பெற்ற த எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற  ஆவணப் படத்தில்  இடம்பெற்றிருந்த பொம்மன் பெல்லி தம்பதியினரை சந்தித்து அவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.  இதை தொடர்ந்து தெப்பக்காடு வளர்ப்பு  யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் யானைகளை பார்வையிட்டு யானைகளுக்கு கரும்பு மற்றும்  பழங்களை வழங்கினார்.  முதல்வருடன் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினும்  யானைகளுக்கு கரும்பு பழங்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில், அரசு தலைமை கொரடா கா ராமச்சந்திரன், மக்களை உறுப்பினர் ஆ ராசா, சுற்றுசூழல், பருவ நிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு,  முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாச ரெட்டி , முதன்மை வன உயிரின பாதுகாவலர் ராகேஸ் குமார் டோக்ரா  மாவட்ட ஆட்சி  தலைவர் லட்சுமி பவ்யா, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன் , முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர், காவல் கண்காணிப்பாளர் நிஷா மிட்டல், வன அதிகாரிகள் கெளதம், வெங்கடேஷ் பிரபு சார் ஆட்சியர் சங்கீதா, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து