முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நிறைவு

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, அக் 5 :

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் க டந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மகா தேரோட்டம் நடந்தது. பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக மலையப்பசாமி தேரில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தார். அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்லக்கு உற்சவம் மற்றும் திருச்சி வாகன நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி உற்சவரான மலையப்பசாமி திருச்சி வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவியர் பல்லக்கிலும் ஊர்வலமாக வந்து வராகசாமி கோயில் அருகே தெப்பக்குள மண்டபத்திற்கு சென்றடைந்தனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் தெப்ப குளத்தில் புனித நீராடினர். இரவு 7 மணிக்கு மேல் கொடியிறக்கப்பட்டு பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. அதன்பின்னர் தங்க திருச்சி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விடுமுறை என்பதாலும், புரட்டாசி சனிக்கிழமை என்பதாலும் திருமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்தனர். நேற்றும் ப க்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago