முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதார திட்டங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழ் நாடு அரசு சுகாதாரத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது-
உலக சுகாதார நிறுவன இந்திய பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் சார்பில் சென்னையில் நான்கு மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநிலங்களுக்கான இலவச மருந்துகள் திட்டம் குறித்த 3 நாள் மாநாடு நடைபெற்றது.
தமிழகத்தின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் குறிப்பிட்டதாவது;
உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநிலங்களுக்கான இலவச மருந்துகள் திட்டம் தொடர்பாக தேசிய மாநாட்டில் மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி வழிகாட்டுதலின்படி கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு அரசு மக்களுக்கு தரமான மருந்துகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் சுகாதாரமான மாநிலத்தை உருவாக்கி வருகிறது. சாதாரன மனிதனுக்கும் மேம்பட்ட சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ் நாடு இந்தியாவிலேயே ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தற்சமயம் குழந்தை இறப்பு விகிதம் 21ஆக உள்ளது.இது தேசிய அளவான 1000க்கு 40 என்பதைவிட பாதி அளவாகும். பேறுகாலதாய்மார்கள் இறப்பு விகிதம் 68 ஆகும். இது இந்திய அளவான 1 லட்சம் பிறப்பிற்கு 178 என்பதை விட குறைவாகும். இச்சாதனைகளை மத்திய திட்டக்குழு மற்றும் பல நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.
மக்களின் முதல்வர்புர ட்சித் தலைவி அம்மாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படி உலகளாவிய சுகாதார பாதுகாப்பை உறுதி பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படிசெய்யும் வகையில் பல சீரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன. அவையாவன;
1994ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துப் பணி கழகம் துவக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேர சேவை ஒவ்வொரு வட்டாரத்திலும் 30 படுக்கைகள் கொண்ட தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை அதிக அளவிலான இரத்த வங்கிகள்125 இரவு நேர பிரசவ அறுவை சிகிச்சை மையங்கள் (சீமாங் சென்டர்) 114 பச்சிளம் குழந்தைகள் மையம் மற்றும் 64 தீவிர சிகிச்சை பிரிவுகள் பிரசவத்தின்பொழுது உறவினர்கள் உடனிருக்கும் வசதி பிறப்பு பதிவுகள் மேற்கொள்ளுதல் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டங்கள் தேசிய திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேற்றி இலக்கை எய்திய சாதனை அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மாதவிடாய் கால சுகாதாரத் திட்டம்,முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக்காப்பீட்டு திட்டம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில்நிதியுதவியை உயர்த்தி வழங்குதல் போன்ற திட்டங்கள் மாநிலத்தில்20சுகாதாரத்தை உறுதி செய்துள்ளன. 3 மேலும், இத்தகைய திட்டங்களை செயல்படுத்தியதால் மக்கள் பெரிதும் பயன்பெற்றுள்ளனர். தற்பொழுது மக்கள் நல்வாழ்வுத்துறை தொற்றாநோய் மற்றும் பூச்சிளால் பரவும் நோய் தடுப்பு முறைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இலவச மருந்துகளை மக்களுக்கு வழங்குவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்படும் மிகவும் விலை உயர்ந்த சைக்ளோப்பிரின் போன்ற மருந்துகள் கூட தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது என்ற தகவலை தங்களோடு பகிர்ந்து கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். மாநிலம் முழுவதும் நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் 6,00,000 புற நோயாளிகளும், 80,000 உள் நோயாளிகளும் பயன் பெறுகின்றனர்.
அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் அனைத்து மருந்துகளும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் 1994ல் புரட்சித் தலைவி அம்மா அ புரட்சித் தலைவியின் தொலைநோக்கு பார்வையால் துவக்கப்பட்டது. இந்நிறுவனம் அரசு மருத்துவமனைகளுக்கு தரமான மருந்து பொருட்களை வழங்குவதை உறுதி செய்கிறது. மருந்து மற்றும் மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்தல், வினியோகம், தரத்தை கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்கிறது. மருந்துகளை கொள்முதல் செய்து இருப்பில் சேமித்தல், வினியோகம் செய்தல் ஆகியவை மாநிலம் முழுவதும் சிறப்பாக செய்கிறது. மாநிலம் முழுவதும் மருந்து கிடங்குகளில் இருப்பு வைத்து தேவைக்கேற்ப அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குகிறது. அவசர காலத்திற்கு தேவைப்படும் அனைத்து மருந்துகளும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின்படி பெறப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் கணினி மூலம் பராமரிக்கப்படுகிறது. நாள்தோறும் வினியோகம் மற்றம் இருப்பு விவரம் கண்காணிக்கப்படுகிறது. 4
.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட நிறுவனமாகும். தமிழகத்தில் மருந்துகளை கொள்முதல் செய்தல், கிடங்குகளில் இருப்பு வைக்கும் முறை, வினியோகிக்கும் முறை ஆகியவைகளை பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன. ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் நல்வாழ்வு துறைகளுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஆலோசனைகளை வழங்கும் பணியையும் செய்கின்றது.
• தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மருந்துகள் கொள்முதல், பராமரிப்பு, வினியோகம் குறித்து பயிற்சிகளை மத்திய பிரதேச மாநிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குகின்றது. சட்டீஸ்கார் மாநிலமும் இந்நிறுவனத்தின் அனுபவத்தினை பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு தங்கள் மாநிலம் / நாடுகளில் இதுபோன்ற நிறுவன செயல்பாடுகளை பின்பற்ற ஆர்வம் காட்டியுள்ளது அனைத்து மாநிலங்களிலும் இலவச மருந்துகள் திட்டம் குறித்த 3 நாள் மாநாடு மிகவும் பயனுள்ளதாக அமையும் என உறுதியாக நம்புகிறேன் இவ்வாறு அவர் பேசினார். 5

உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிடாக்டர் நடா மெனாப்டேபேசும்பொழுது, இந்த மாநாட்டை தமிழ்நாட்டில்நடத்திட தேர்வு செய்யதது எதேச்சையான நிகழ்வு அல்ல. இதற்கு காரணம் மக்களுக்கு மருத்துவ திட்டங்களை செயல்படுத்துவதிலும், இலவச மருந்துகள் வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னோடியாகவும், மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. எனவேதான் இம்மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டோம். பிற மாநிலங்கள் தமிழ்நாட்டின் சிறந்த அனுபவத்தையும், சாதனைகளையும் பின்பற்றி, இலவச மருந்துகளை மக்களுக்கு வழங்குவதில் சிறப்பாக செயல்பட இது உதவும்.
இந்நிலையில் சிசு இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், பிரசவத்தின் பொழுது இறப்பு விகிதத்தை குறைப்பதிலும் மில்லினம் வளர்ச்சி இலக்கை) எய்துவதிலும், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் வெற்றியையும் அனுபவத்தையும் மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். சுகாதார முறைகளில் அரசு எடுத்துள்ள பல்வேறு முறையான நடவடிக்கைகள், மருத்துவத்துறை நிபுணர்களுக்கான வசதிகள், மருத்துவத்தை நாடும் மக்களுக்கு தரமான சிகிச்சை, மருந்துகள் வழங்குதல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்நாடு சிறப்பாக செய்து வருகிறது. அவசரகாலபச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் துவக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும்தாய்மார்களை காப்பாற்றுவது பாராட்டிற்குரியது. இம்மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் சுகாதார பணிகளை உலக சுகாதார நிறுவனம் மிகவும் பாராட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார். 5

...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து