இன்றைய நவீன கால கட்டங்களில் நிலத்தடி நீரை எடுப்பதற்காக போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுகின்றன. அதற்காக நிலத்தடி நீரை கண்டுபிடிக்க நவீன உத்திகளும், பழைய முறைகளும் கையாளப்படுகின்றன. ஆனாலும் தோண்டினால் தண்ணீர் வருவதில்லை... வெறும் காற்றும் மண்ணும் தான் வருகிறது. ஆனால் பண்டைய விவசாய காலங்களில் நிலத்தடி நீரை மிக சுலபமாக நமது முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது எப்படி...ஒரு விவசாயி கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு புறமும் அடைத்துவிட்டு, பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்தில் மேய விட வேண்டும். பின்னர் அவற்றை கவனித்தால், அவை மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்துதான் அசை போடுமாம். இவ்வாறு தொடர்ந்து 4, 5 நாட்கள் கூர்மையாக கவனித்தால், அவை ஒரே இடத்தில் தான் படுக்குமாம். அந்த இடத்தை தோண்டினால் அற்புதமான குளிர்ந்த நீர் கிடைக்கும்..இயற்கையையே அறிவியலாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களின் அறிவுத் திறன் வியக்கச் செய்கிறது அல்லவா?š
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தனது நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் மூலம் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று வந்தார். இது மிகப்பெரும் மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகளான 74 வயதான லாரா ஷெப்பர்ட் சர்ச்லே உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது. லாரா ஷெப்பர்ட்டின் தந்தையான ஆலன் ஷெப்பர்ட் கடந்த 1961-ம் ஆண்டு மே 5-ந் தேதி புளோரிடா மாகாணத்தில் இருந்து மெர்குரி விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்து, அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் என்கிற பெருமையை பெற்றார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புளூ ஆரிஜின் நிறுவனத்துக்கு சொந்தமான வான் ஹார்ன் ஏவுதளத்தில் இருந்து ஆலன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேருடன் நியூ ஷெப்பர்ட் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டது. இந்த பயணம் சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. நியூ ஷெப்பர்ட் விண்கலம் 100 கிலோமீட்டர் உயரம் வரை பயணித்தது. அதன் பின்னர் அந்த விண்கலம் மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சியானினா என்ற காளை இனம் தான் தற்போது வரையிலும் உலகிலேயே வீடுகளில் வளர்க்கப்படும் காளைகளில் மிகப் பெரிய காளை இனமாக அறியப்பட்டுள்ளது. உயரத்திலும் எடையிலும் இவை மெகா சைஸ். தொடக்கத்தில் இவை இத்தாலியில் வளர்க்கப்பட்டன. பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு பரவின. இவற்றின் எடை சுமார் 1700 கிலோ. தொடக்கத்தில் இறைச்சிக்காக இவை வளர்க்கப்பட்டன. 2 ஆம் உலகப் போருக்கு பிறகு இது உலகம் முழுவதும் பரவலான இனமாக மாறியது. பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அல்ஜீரியாவில், ஃபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்குள் மக்களை இழுக்க தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக் எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தங்கும், வெள்ளை மாளிகை சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஆறு தளங்களில், 132 அறைகள், 35 குளியலறைகள், 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 8 மாடிப் படிகள், 3 மின் தூக்கிகள் உள்ளன. அதிபருக்கு சமைப்பதற்காகவே 5 சமையல் கலைஞர்கள் எப்போதும் பணியில் இருப்பார்களாம்.
இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


