முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிலைகளின் நகரம் எது தெரியுமா?

கேரள மாநிலத்தில் அதிகமான சிலைகளை கொண்டுள்ள நகரம் எது என்று தெரியுமா.. அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தான் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயலகம் முன்பு வைக்கப்பட்ட மாதவராவ் என்பவரின் சிலையில் தொடங்கி தற்போது வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு சிலைகளின் நகரம் என்ற செல்லப் பெயரும் உண்டு

செயற்கை சிறுநீரகம்

இதய பாதிப்புக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுவது போல் சிறுநீரகம் செயலிழந்தால் பொருத்துவதற்கு செயற்கை சிறுநீரகத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வில்லியம் பி‌ஷல், சுவோராய் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். கையடக்க வடிவிலான இந்த கருவி, காபி கப் அளவில் நானோ தொழில் நுட்ப முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்பை பயன்படுத்தி அதில் சிறுநீரக முடிச்சுகளில் இருந்து திசு செல்களை எடுத்து சல்லடையில் தேனடை உருவாக்குவது போல் செல்களை வளர வைக்கிறார்கள். பின்னர் அந்த எந்திரத்தை அடிவயிற்றுக்குள் வைத்து சிறுநீரக ரத்த நாளங்களுடன் இணைத்து பொருத்தி வைத்து விடுவார்கள். இந்த செயற்கை கருவி ரத்த சுத்திகரிப்பு மட்டுமின்றி இயற்கையாக சிறுநீரகம் செய்யும் வேலைகளை செய்யும்.

இந்தியர்களின் உடலில் சர்க்கரை நோயை அதிகரிக்க செய்யும் மரபணு

15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீன்/புரத வகை சர்க்கரை நோய் (நீரிழிவு), மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டை 1.5 மடங்கு அதிகரிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பயனாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட சாத்தியம் உள்ளவர்களை உண்மையில் அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம். இந்த மரபணு அமைப்பு குறிப்பிட்ட நபர்களின் உடலில் ஆயுள் முழுவதும் மாறாமல் இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதய, ரத்தக்குழாய், வளர்சிதை நோய்கள் ஏற்படும் குடும்ப வரலாறு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை உடல் நல நடவடிக்கை எடுப்பதற்கும், நோயை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அச்சு பிசராமல்....

ஒரு மனிதனின் கையெழுத்தை அப்படியே உள்வாங்கி அதை எழுதுகிறது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பான்ட் ரோபோ. மனிதன் பேனாவை பிடித்து எழுதுவது போல் ரோபோ அழகாக பேனாவை பிடித்து எழுதக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் கணினி, டேப்லட் அல்லது ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றில் பான்ட் எழுதும் கடிதத்தை டிஜிட்டல் கடிதமாகவும் மற்றவருக்கு அனுப்பி வைக்கலாம்.

குரங்குக்கு டயட்

பாங்காக்கில் உள்ள புளோட்டிங் மார்க்கெட் என மிதக்கும் சந்தை அருகே குண்டு குரங்கு ஒன்றை கண்ட வனவிலங்கு அதிகாரிகள் அதன் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். குண்டு அங்கிள் என்ற பெயர் வைத்து,  15 கிலோவாக இருக்கும் அதன் எடையை குறைக்க டயட்டை பின்பற்றச் சொல்லி, தினமும் ஓட வைத்து பயிற்சி கொடுக்கிறார்களாம்.

பற்கள் பளபளக்க

பற்கள் மீது எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்து வந்தால், அதில் மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சை பழத்தைக் கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகள் நீங்கும். தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அசிட்டிக் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது.  ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து, பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony