முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கறிவேப்பிலை அடை

Cooking time in minutes: 
20
Ingredients: 

கறிவேப்பிலை அடை செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொடியா நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு கப். 
  2. புழுங்கல் அரிசி - ஒரு கப். 
  3. குண்டு மிளகாய் வத்தல் - 6.
  4. துவரம் பருப்பு - 100 கிராம்.
  5. கடலைபருப்பு -100 கிராம்.
  6. சோம்பு - 1 ஸ்பூன்.
  7. பட்டை - 2.
  8. பொடியா நறுக்கிய சின்ன வெங்காயம் - 150  கிராம்.
  9. தேங்காய் - 1/2 மூடி.
  10. பொடியாக நறுக்கிய பூண்டு - 4  பல்.
  11. நெய் - தேவையான அளவு.
  12. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. புழுங்கல் அரிசி ஒரு கப்,துவரம் பருப்பு 100 கிராம் மற்றும்  கடலைபருப்பு 100 கிராம்.ஆகியவற்றை தனித்தனி பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைத்து கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் ஊற வைத்த ஒரு கப் புழுங்கல் அரிசி,பொடியா நறுக்கிய ஒரு கப் கறிவேப்பிலை,6 குண்டு மிளகாய் வத்தல் மற்றும்  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
  3. இதனுடன் ஊற வைத்த 100 கிராம் துவரம் பருப்பு,100 கிராம் கடலைப் பருப்பு ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் 2 பட்டை,போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. மிக்சி ஜாரில் பொடியா நறுக்கிய 1/2 மூடி தேங்காய்யை போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் அடை மாவை போட்டு,இதனுடன்  பொடியா நறுக்கிய 150 கிராம் சின்ன வெங்காயம், மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல், பொடியா நறுக்கிய 4 பல் பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு,சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அடை மாவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் தாவவை வைத்து சிறிதளவு நெய் ஊற்றவும்.
  7. நெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள அடை மாவை சிறிதளவு எடுத்து ஊற்றவும்.
  8. அடை மாவை சுற்றி சிறிதளவு நெய் ஊற்றவும்.திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்,நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  9. இதேபோல் தயார் வைத்துள்ள எல்லா மாவையும் வேக வைத்து எடுக்கவும்.
  10. சுவையான கறிவேப்பிலை அடை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago