முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      தமிழகம்
Karur-1 2025-10-18

Source: provided

கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார். அதேவேளை, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூகவலைதளங்கள் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டன. 

இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி அவதூறு பரப்பியதாக சென்னை கோடம்பாக்கத்தை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் (வயது 64) என்பவரை கடந்த 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வரதராஜன் காவல்துறையில் கைரேகை பிரிவில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வரதராஜன் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தமனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து