முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      தமிழகம்
Vanathi 2023 06 13

Source: provided

கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுத்தவர்கள், இப்போது, தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள். தமிழ்நாடு முதல்வர் என்பவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை நாத்திகர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் , இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. ஆனால், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வாழ்த்து கூறுகிறார். தி.மு.க.வின் 'மதச்சார்பின்மை' என்பதும், தி.மு.க.வின் 'நாத்திகம்' என்பதும் 'இந்து மத வெறுப்பு' என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் முதல்வர் நிரூபித்து வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்றுமுன்தினம் துணை நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் பேசும்போது, "எதிர்க்கட்சியான பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையை பாராடுகிறேன். நன்றி தெரிவிக்கிறேன். அதே பெருந்தன்மையோடு தீபாவளி பண்டிகைக்கும் வாழ்த்து கூற வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தேன். உடனே, பதறிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், "அதெல்லாம் இங்கே பேசக் கூடாது. மதம் பற்றி இங்கே விவாதம் நடைபெறவில்லை. நிதி பற்றி மட்டுமே பேச வேண்டும்" எனக்கூறி நான் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார்.

இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுத்தவர்கள், இப்போது, "தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து