முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் அமையும் பெரியார் உலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1.70 கோடி நிதியை கி.வீரமணியிடம் வழங்கினார்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      தமிழகம்
CM-1-2025-10-18

திருச்சி, திருச்சி அருகே சிறுகனூரில் அமையும் 'பெரியார் உலக'த்துக்கு ரூ. 1.70 கோடி நிதியை திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தந்தை பெரியாரின் சமூகப் புரட்சிக்கான செயல்பாடுகளைப் போற்றும் வகையிலும் அவரது கொள்கைகளை உலகெங்கும் பரப்பும் வகையிலும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி திருச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 'பெரியார் உலகம்' உருவாகி வருகிறது. இதன் மையப் பகுதியில் 60 அடி பீடத்தின் மீது 95 அடி உயர சிலையுடன் தரையிலிருந்து மொத்தம் 155 அடி உயரத்தில் பெரியாரின் பேருருவச் சிலை காட்சியளிக்கும். சமத்துவத்திற்காகவும் சமூகநீதிக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பெருஞ்சிறப்புகளை உலக அரங்குகளில் எதிரொலிக்கும் ஒரு நினைவுச் சின்னமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார் படைப்புகள் அடங்கிய நூலகம், பூங்கா, கலையரங்கம் என பிரமாண்டமாக அமைந்து வருகிறது.

இதற்கு பல்வேறு அமைப்பினரும் நிதி அளித்து வரும் நிலையில் திமுக சார்பில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ரூ. 1.70 கோடிக்கான காசோலையை திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் “பெரியார் உலக”த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் வழங்கினேன்! பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து