முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தவா சிக்கன் ஃப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

தவா சிக்கன் ஃப்ரை  செய்யத் தேவையான பொருட்கள்.

  1. லெக்பீஸ் சிக்கன் - 6.
  2. பட்டர் - 4 ஸ்பூன்.
  3. சிகப்பு மிளகாய் - 7.
  4. சீரகம் - 1 ஸ்பூன்.
  5. பிரியாணி இலை - 3.
  6. பூண்டு - 12 பல்.
  7. இஞ்சி - 1 துண்டு.
  8. எண்ணெய் - 2 ஸ்பூன்.
  9. எலுமிச்சம்பழ சாறு - 1 ஸ்பூன்.
  10. மிளகாய்தூள் - 1 ஸ்பூன்.
  11. மல்லி இலை - சிறிதளவு.
  12. உப்பு -தேவையான - அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு மிக்சி ஜாரில்  7 சிகப்பு மிளகாய்,ஒருஸ்பூன் சீரகம்,பிரியாணி இலை 3,பூண்டு 12 பல்,இஞ்சி ஒரு துண்டு,எண்ணெய் 2 ஸ்பூன்,எலுமிச்சம்பழ சாறு ஒரு ஸ்பூன்,மிளகாய்தூள் ஒரு ஸ்பூன்,மல்லி இலையை  சிறிதளவு போட்டு நன்றாக  அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் மிக்சி ஜாரில் அரைத்த மசாலா கலவையை எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு உப்பு போட்டு  கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் 6 லெக்பீஸ்  சிக்கனை எடுத்து சிக்கனை 4 இடத்தில் கத்தியால்  கீறி வைத்துக்கொள்ளவும்.
  4. இதனுடன் தயார் செய்து வைத்துள்ள மசாலா  கலவையை போட்டு  சிக்கனில் அனைத்து பகுதியிலும் மசாலா  கலவை படும்படி நன்றாக கலந்து விட்டு சிக்கனை 45 நிமிடங்கள்  ஊற வைக்கவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் பட்டரை போடவும்.
  6. பட்டர் நன்றாக உருகிய பின்,மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை  போட்டு பொரிக்கவும்.
  7. இதனுடன் மேலும் 2 ஸ்பூன் பட்டரை போட்டு சிக்கனை திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான தவா சிக்கன் ஃப்ரை  ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago