எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து காரில் கள்ளக்குறிச்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தியாகதுருகம் அடுத்த திம்மலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரூ.2,302 கோடி மதிப்பில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் காலணி உற்பத்திக்கான ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அதன் அருகே உள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றினார்.
இதையடுத்து ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


