முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பொரி முறுக்கு

Cooking time in minutes: 
30
Ingredients: 

பொரி முறுக்கு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொரி  - 2 கப்.
  2. பொட்டுக்கடலை - 1/4 கப்
  3. உளுந்தம்பருப்பு - 1/2 கப்.
  4. பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன். 
  5. எள்ளு  - ஒரு டீஸ்பூன். 
  6. பச்சை மிளகாய் - 4.
  7. நெய்  - ஒரு டீஸ்பூன் 
  8. உப்பு  - தேவையான அளவு.
  9. எண்ணெய் - 1/2 லிட்டர். 
Method: 

செய்முறை:-

  1. அடுப்பில் கிடாய் வைத்து 1/2 கப் உளுந்தம்பருப்பை போட்டு நன்றாக வறுக்கவும்.
  2. சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.இதனுடன் 1/4 கப் பொட்டுக்கடலையை போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மிக்சி ஜாரில்  2 கப் பொரியை  போட்டு அரைக்கவும்.இதனுடன் 4 பச்சை மிளகாய்யை போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் மிஸ்சியில் அரைத்த பொட்டுக்கடலை மாவையும் ,பொரிமாவையும் போட்டு இதனுடன் 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் எள்ளு, ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு மாவை கலந்து வைத்துக்கொள்ளவும்.
  5. தயார் செய்து வைத்துள்ள முறுக்கு மாவை முறுக்கு உரலில் போட்டு பிழிந்து  மாவை சுற்றி வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட்  ஆயில் 500 மில்லி ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் சுற்றி வைத்துள்ள முறுக்கு மாவை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும். 
  8. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  9. சுவையான பொரி முறுக்கு  ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்