Idhayam Matrimony

நேபாளத்தில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 6 பெப்ரவரி 2026      உலகம்
Suicide 2023 04 29

காத்மாண்டு, நேபாளத்தில் திருமணத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து நேபாளத்தின் சுதூரபச்சிம் மாகாணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தனர் என்று காத்மாண்டு காவல்துறை தெரிவித்தனர்.

பைதடி மாவட்டத்தின் புர்சௌடி நகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருமணக் குழுவினரை ஏற்றிச்செல்லும்போது, வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெண் உள்பட இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்ததாக காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்த பயணிகள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக பாரம் ஏற்றிச் சென்றதாலும், அழுத்தக் குழாய் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஆயுதக் காவல் படையின் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். உள்ளூர் மக்கள், நேபாள காவல்துறை மற்றும் ஆயுதக் காவல் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து