எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாட்னா, பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த பிரசாந்த் கிஷோர் கட்சியின் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து தள்ளுபடி செய்தது.
பீகாரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஜே.டி.யூ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இத்தேர்தலில் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன சுராஜ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஜன சுராஜ் கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பெண் பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பீகார் அரசாங்கத்தின் முடிவு நடத்தை விதிகளை மீறியது என்றும், வாக்காளர்களைப் பாதிக்கும் வகையில் ஒரு நலத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பீகாரில் புதிய தேர்தல்களை நடத்தக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜன சுராஜ் கட்சியின் மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்பதால், பாட்னா ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின் பேரில், ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் நாங்கள் ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. உங்கள் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன? மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் விளம்பரம் தேடுவதற்காக இந்த நீதித்துறை மேடையைப் பயன்படுத்துகிறீர்களா? என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


