முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-3

  1. கல்லடைப்பு தீர ;-- நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
  2. கல்லடைப்பு நீங்க ;-- மருதாணி வேர் பட்டையை சிதைத்து காய்ச்சி  சாப்பிட கல்லடைப்பு நீங்கும்.
  3. கல்லடைப்பு நீங்க ;-- மாவிலங்க பட்டை கஷாயம் காலை மாலை சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும்.
  4. சிறுநீரக கோளாறு நீங்க ;-- முள்ளங்கி சாறு 30 மில்லி காலை மாலை சாப்பிட சிறுநீரக கோளாறு நீங்கும்.
  5. கல்லடைப்பு நீங்க ;-- அசோகமர விதையை பொடி செய்து அரை கிராம் உணவுக்கு முன் சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும்.
  6. சிறுநீரக கல் கரைய ;-- வாழைத்தண்டை சமைத்து உண்ண சிறுநீரக கற்கள் கரையும்.
  7. சிறுநீர் கோளாறு நீங்க ;-- முலாம்பழம் சாப்பிட்டு வர சிறுநீர் கோளாறு நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்