முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குறுக்கு வலி நீங்க இயற்கை மருத்துவம்

  • கொஞ்சம் வேலை செய்தாலே குறுக்கு வலி,முதுகு வலி, உடல் சோர்வு என பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
  • இப்போது இருக்க கூடிய அவசர உலகத்தில் நாம் எடுத்து கொள்ளும் உணவுமுறை மாற்றங்களினால், உடலுக்கு தேவையான ஓய்வினை கொடுக்காமல் இருப்பதும் தான் இதற்கு காரணம்.
  • இரண்டு சக்கர வாகனம்,மற்றும் நான்கு  சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்யும் போதும் குறுக்கு வலி ஏற்படுகிறது,இதனை சரிசெய்ய நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களை பயன் படுத்தி குணம் பெறலாம்

இதற்கு தேவையான பொருட்கள்

வெற்றிலை -1.

ஆமணக்கு எண்ணெய் - சிறிதளவு.

மிளகு - ஒன்று 

கிராம்பு - ஒன்று

ரோஜா இதழ் - 10.

கசகசா -  சிறிதளவு 

  1. வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெயை தடவி ஒரு மிளகு,ஒரு கிராம்பு,10 ரோஜா இதழ்கள் மற்றும் சிறிதளவு கசகசாவை சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு விட்டு சிறிதளவு சூடான நீரை அருந்தி வந்தால் போதும் இடுப்பு வலி, முதுகு வலி, உடல் சோர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
  2. ரோஜா இதழ்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. ரோஜா பூக்கள் குளிர்ச்சித் தன்மை உடையவை. ரோஜா இதழ்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து சமநிலைப்படுத்துகிறது.
  3. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.
  4. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளன.வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை  பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.
  5. கசகசா விதைகளில் உள்ள ஜிங்க் சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். இது உடலின் நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.இல்லற வாழ்வில் ஈடுபாடு வருவதோடு ஆண்மையை அதிகரிக்கவும் கசகசாவிதைகள் பெரிதும் உதவுகின்றன.
  6. இந்த மருத்துவ பொருள்களை பயன்படுத்தி வந்தால் இடுப்பு வலி, முதுகு வலி, உடல் சோர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்