முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்.

 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம் செய்யத் தேவையான பொருள்கள்; 

நாவல் மரப் பட்டை -  25 கிராம்.

வில்வ இலைகள்  -  25 கிராம்.

சிறுகுறிஞ்சான் இலைகள்  -  25 கிராம்.

நாவல் இலைகள்  -  25 கிராம்.

பாவற்காய் இலைகள்  -  25 கிராம்.

முருங்கை இலைகள்  -  25 கிராம்.

ஆவாரம்பூ இலைகள்  -  25 கிராம்.

வெள்ளை அருகம்புல்  -  25 கிராம்.

பச்சை அருகம்புல்  -  25 கிராம்.

ஆடு தின்னா பாலை இலைகள்  -  25 கிராம்.

 

 

 

 

செய்முறை;--

மேற்கண்ட மூலிகை பொருள்களை 14 நாட்கள் நிழலில் காயவைத்து 15 வது நாள் 2 மணி நேரம் மட்டும் வெயிலில் காயவைத்து எடுத்து நன்கு சுத்தம் செய்து தனித்தனியாக இடித்து பொடி செய்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள பொடியை மருந்துக்கடையில் கிடைக்கும் கேப்சசூல்களில்  அடைத்து வைத்துக்கொண்டு தேவையான அளவு சாப்பிட ரத்தத்தில் உள்ள கூடுதலாக சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.

 

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கடை பிடிக்க வேண்டிய 10 குறிப்புகள்;--

1 பழைய மருந்துடன் இந்த மருந்தையும் சில நாட்கள் சேர்த்து சாப்பிடலாம்,சர்க்கரை அளவு குறைய,குறைய,பழைய மருந்தை படிப்படியாக குறைக்கவும்.

2 பதட்டமான நேரத்தில் பரிசோதனை செய்தால் சர்க்கரை அளவு கூடுதலாகவே காட்டும் எனவே,பதட்டம் இல்லாமல் இருந்து சர்க்கரை அளவை குறைக்க முயற்சி  செய்ய வேண்டும்.

3 காலை 8.30,மதியம் 1.30,மற்றும் இரவு 8.00 என சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்.

4 நார் சத்துகள் அதிகம்  உள்ள உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.

5 நாற்பது வயதுக்கு பின்னர் உணவின் அளவு குறைவாகவும்,காய்கறிகளின் அளவு அதிகமாகவும் உண்ண வேண்டும்.

6 சாப்பிடும் போது உணவை நன்கு மென்று தின்றால் 8 இட்லி சாப்பிட வேண்டிய இடத்தில் 2  இட்லி சாப்பிட்டாலே போதும்.

7 முளை கட்டிய பயறு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை அளவு குறையும்.

8 பூமிக்கு கீழ் விளையும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.

9 குடிநீரில் ஆவாரம்பூ மற்றும் வெந்தயம் போட்டு உற வைத்து அருந்தி வர சர்க்கரையின் அளவு குறையும், மேலும் ஆவாரம்பூவை பறித்து காயவைத்து இடித்து டீ போட்டு அருந்தலாம்.

10 நாவல் பழம் சாப்பிட பலன் கிடைக்கும்,நாவல்பழ விதைகளை பொடி செய்து சாப்பிடலாம்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்