முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜர் பிறந்த நாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் புகழஞ்சலி

வியாழக்கிழமை, 15 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: காமராஜரின் கல்வி, சுகாதாரம் பெண்ணுரிமை இன்றளவும் மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 119-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இதையட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.  பிரதமர் மோடியும் காமராஜரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தேச வளர்ச்சி மற்றும் சமூகத்தை வலிமையடைய செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் வலியுறுத்திய கல்வி, சுகாதாரம் பெண்ணுரிமை ஆகியவை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து