முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் அரண்மனை போல் வடிவமைக்கப்பட்ட வாக்குச்சாவடி

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      இந்தியா
Karnataka 2024-05-07

Source: provided

ஷிமோகா : கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் உள்ள வாக்குச்சாவடியை, வாக்காளர்கள் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் அரண்மனைபோல் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 2 கட்டங்கள் முடிந்த நிலையில், நேற்று மூன்றாம் கட்ட தேர்தல் நடந்தது. வாக்கு  சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. 100 சதவீதம் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்கள் ஓட்டினை பதிவு செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றை அரண்மனை போன்று செட் அமைத்து வாக்காளர்களை கவர்ந்துள்ளது தேர்தல் ஆணையம்.

அரண்மனை போல வடிவமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்களை அரண்மனை சேவகர்கள் போன்ற உடையணிந்து தேர்தல் அலுவலர்கள் வரவேற்கின்றனர். வாக்களிக்கும் மக்கள் அங்கிருக்கும் மன்னர்கள் அமரும் அரியணையில் கிரீடத்துடன் அமர்ந்து, ஓட்டுப்போட்டதை அடையாளம் காட்டும்படி விரலை உயர்த்தி போட்டோ எடுத்துக் கொள்ளலாம். 

வாக்காளர்கள் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து