முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் 15-ம் தேதி வரை நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      இந்தியா
Manish 2023-04-06

Source: provided

புதுடெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 15-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. 

கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நேற்று ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் சிசோடியாவுக்கு வரும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து