முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் தொண்டர் கொலை: நந்திகிராமில் பா.ஜ. போராட்டம்; கடைகளுக்கு தீ வைப்பு சம்பவம்

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Nandigram-2024-05-23

நந்திகிராம், மேற்கு வங்க மாநிலம், புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராமில் பாஜக பெண் தொண்டர் கொல்லப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கடைகளுக்கு தீவைப்பு சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், புர்பா மேதினிப்பூர் மாவட்டம், நந்திகிராம் அருகே உள்ளது சோனாச்சுரா கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ரதிராணி அரி (38). பாஜக தொண்டரான இவரை, திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற குற்றவாளிகள் கொலை செய்ததாக கூறி, நந்திகிராமில் பாஜக தொண்டர்கள் டயர்களை எரித்து சாலை மறியல் போராட்டத்திலும், கடைகளை அடைக்குமாறும் வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீஸார், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக நந்திகிராமில் பாஜக முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும், பின்னர் அதனை திரும்பப் பெற்றுவிட்டதாகவும் அக்கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அடையாளம் தெரியாத மற்றும் ஆயுதம் ஏந்திய நபர்கள் நேற்று இரவு, இருசக்கர வாகனங்களில் வந்து, ரதி ராணி அரியை கொலை செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து