முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Jaishaker 2024-12-03

Source: provided

புதுடெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்

நெதர்லாந்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், “பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்துக்கள் என உறுதிப்படுத்திய பிறகே அந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

26 பேரின் மத நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களது குடும்பங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டனர். இது மாநிலத்தின் சுற்றுலாவுக்கு தீங்கு விளைவிப்பதற்காகவும், வேண்டுமென்றே மத முரண்பாட்டை உருவாக்குவதற்காகவும் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் தலைமை, குறிப்பாக அதன் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்.” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியும், தற்போதைய பீல்ட் மார்ஷலுமான அசிம் முனீர் கடந்த ஏப்ரல் 16 அன்று இஸ்லாமாபாத்தில் நடந்த வெளிநாட்டு பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் உரையாற்றிய போது, “காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு, நாங்கள் அதை மறக்க மாட்டோம். நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை மறந்துவிடாதபடி, பாகிஸ்தான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லவேண்டும் என்று பேசியிருந்தார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து