முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா புறப்பட்டது

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Kanimozhi

Source: provided

புதுடெல்லி: கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு  ரஷியாவுக்கு புறப்பட்டனர். 

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான குழு நேற்று ரஷியாவுக்கு புறப்பட்டனர். அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த குழுவில், சமாஜ்வாதி கட்சியை சார்ந்த எம்.பி. ராஜீவ் ராய், பா.ஜ.க. கட்சியை சார்ந்த எம்.பி. கேப்டன் பிரஜேஷ் சௌட்டா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.பி. பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த அசோக் குமார் மித்தல், தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து