முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Modi 2024-09-15

Source: provided

புதுடெல்லி: தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார். தமிழகத்தில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையங்கள் சிட்டி சென்ட்டர் போன்று ரூப் பிளாஸா, புட் கோர்ட், சிறுவர் விளையாட்டுப் பகுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் தனித்தனி உள் நுழையும் மற்றும் வெளியேறும் வாசல்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தப்பகுதி, மின்தூக்கி, மின்னுயர்த்தி, எக்சிகியூட்டிவ் லான்ஜ், காத்திருப்புப் பகுதி, டிராவலேட்டர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தோழமையான வசதிகள்.

இந்நிலையங்கள் ஒருங்கிணைந்த மல்ட்டி மோடல் இணைப்புகளுடன் அந்தந்தப் பகுதிகளுக்கு பொருளாதார மேம்பாட்டு மையங்களாகத் திகழும். சுற்றுச்சூழல் அழகை தக்கவைக்க மின் சிக்கனம் மற்றும் பசுமைப் பாதுகாப்புத் திட்டங்களுடன் கட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாஹே அம்ரித் பாரத் ரயில் நிலையமும் திறக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து