முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கா்னல் சோஃபியா விவகாரம்: மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்த சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா் என்று விஜய் ஷா கூறியிருந்தாா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில் இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படியே விஜய் ஷா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன் மீதான வழக்குப்பதிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விஜய் ஷா தொடர்ந்த வழக்கை அவசர வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட், ‘பதற்றமான சூழலில் நாடு இருந்தபோது, மாநில அமைச்சராக இருக்கும் நபா் மிகுந்த பொறுப்புணா்வுடன் வாா்த்தைகளை வெளியிட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்திருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மன்னிப்பு கேட்டு அமைச்சர் வெளியிட்ட வீடியோவை விமர்சித்த நீதிபதி சூர்ய காந்த், ”நீங்கள் வெளியிட்டது எது மாதிரியான மன்னிப்பு? நான் பேசியது மனதை புன்படுத்தியிருந்தால் எனக் குறிப்பிட்டு மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் உண்மைத்தன்மை இல்லை. வழக்கில் இருந்து தப்பிக்க வீடியோ வெளியிட்டுள்ளார்” என கண்டனம் தெரிவித்தார்.

மேலும், நாங்கள் மன்னிப்பை ஏற்கவில்லை, நிராகரிக்கிறோம். எங்களுக்கு மன்னிப்பு தேவையில்லை, வழக்கு நீதிமன்றத்துக்கு வந்ததால் மன்னிப்பு கேட்கிறீர்கள். நீங்கள் அனுபவமிக்க அரசியல்வாதி, வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நாடே உங்களைக் கண்டு வெட்கப்படுகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், காவல்துறை பதிவு செய்த வழக்கை விசாரிக்க மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டனர்.

3 அதிகாரிகளில் ஒருவர் ஐஜி அல்லது டிஜிபி அந்தஸ்து அதிகாரியாக இருக்க வேண்டும், மூவரும் வெளிமாநில அதிகாரிகளாக இருக்க வேண்டும், ஒரு பெண் அதிகாரி இடம்பெற வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணையின் முழு அறிக்கையை சிறப்புக்குழு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்கின் விசாரணையை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். விசாரணை முடியும் வரை அமைச்சரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து