முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 29-ல் சிக்கிம் செல்கிறார் பிரதமர் மோடி?

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
Modi PM 2024-12-20

Source: provided

ஷில்லாங் : சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 29 அன்று சிக்கிம் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் வருகை குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அவர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  பிரதமர் மோடியை வரவேற்க பால்ஜோர் மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மனன் கேந்திராவில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தோம், ஆனால் அந்த இடத்தில் பெரியளவிலான கூட்டம் கூட முடியாது என்பதால், பிரதமர் வருகையின் இடத்தை மாற்றியமைத்ததாக ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சியின் போது தமாங் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மக்களை வாழ்த்துவதற்காகப் பிரதமர் முழு மனதுடன் மாநிலத்திற்கு வருகை தர விரும்புகிறார். இது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம், அதனால் பிரதமர் நிச்சயம் வருகை தருவார் என்று அவர் கூறினார்.

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பொது வாக்கெடுப்பைத் தொடர்ந்து மே 16, 1975 அன்று இந்திய மாநிலமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து