முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.55 கோடி மதிப்பிலான திட்டங்கள்: இந்தியா-மாலத்தீவு இடையே ஒப்பந்தம்

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
Maldives 2023-10-30

Source: provided

டெல்லி : மாலத்தீவில் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை மேற்கொள்ளும் இந்தியா ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவின் அண்டை நாடு மாலத்தீவு. அரபிக்கடலில் அமைந்துள்ள தீவுநாடான மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, இரு தரப்பு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் மேலும் வளர்ச்சியடைந்தது. அதேபோல், மாலத்தீவுக்கு இந்தியா நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மாலத்தீவில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை இந்தியா மேற்கொள்ள இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மாலத்தீவில் படகு சேவை, போக்குவரத்து, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளை மேம்படுத்த இந்தியா 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாட்டு வெளியுறவுத்துறை மட்டத்தில் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து