முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டிவியில் தெரியும் உணவின் சுவையை நாவால் வருடி உணரும் புதிய ஸ்கிரீன்

தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நாவால் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியாஷிடா என்பவர்தான் இந்த கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். இதன் மூலம் டிவியில் தோன்றும் உணவு பொருள்களின் சுவையை டிவியின் மீது ஒட்டப்பட்டுள்ள ஒரு வகை பிலிம் மூலம் கண்டு பிடிக்க முடியும். அதை நாவால் வருடுவதன் மூலம் டிவியில் தோன்றும் உணவுப் பொருளின் சுவை தெரியும் என்கிறார். இதை தயாரிக்க இந்திய மதிப்பில் ரூ.65 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார். இதன் மூலம் தொலைவில் செய்யப்படும் டிஷ்களின் டேஸ்டை நம் டிவிலேயே நாவால் ருசிக்கலாம் என்றால் ஆச்சரியம் தானே..

6.6 கோடி ஆண்டுகள் சிதையாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு கண்டுபிடிப்பு

தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த டைனோசர் முட்டைக்கரு குறைந்தபட்சம் 66 மில்லியன் (6.6 கோடி) ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அக்கரு பல் இல்லாத தெரொபாட் சைனோசர் அல்லது ஓவிரப்டொரொசராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அக்கருவுக்கு பேபி யிங்லியாங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டைனோசர்களுக்கும், நவீன கால பறவைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புரிதலை ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு வழங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைக்கரு புதை படிமத்தில், இந்தக் கரு, கை கால்களுக்கு கீழ் தலையை வைத்து சுருட்டிக்கொண்டு இருக்கிறது. பறவைகளின் முட்டையில்தான் குஞ்சு பொறிப்பதற்கு முன் இப்படி நடக்கும். ஆசியா மற்றும் வட அமெரிக்கா என்றழைக்கப்படும் பகுதிகளில், 100 மில்லியன் முதல் 66 மில்லியன் (10 கோடி முதல் 6.6 கோடி) ஆண்டுகளுக்கு முன், இறக்கைகள் கொண்ட இந்த டைனோசர்கள் இருந்தன.

செரபியம் காடுகள்

340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.

கொழுப்பை கரைக்க

தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரும்.

புதிய வசதி

கூகுள் மேப்பில் ஜி.பி.எஸ் மூலம், குரல் வழிகாட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கூகுள் மேப்பில் கேம்கள் விளையாடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் மூலம் இப்போது 'சி' கேம் விளையாட முடியும். கூகுள் மேப்பில் உள்ள மஞ்சள் நிற குறியீட்டை தொட்டால், இந்த கூல் கேமின் திரை திறக்கும்.

கவனம் தேவை

சிறுவயதில் குழந்தைகள் W வடிவில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இதை நாம் ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், குழந்தையின் இடுப்பு சுழற்சியில், தீவிர எலும்பியல் பிரச்சனைகளை உருவாக்கும். மேலும், தசைகள் சிதைவுற்று, சுருங்கி, எலும்புகளின் வளர்ச்சியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது. எனவே பெற்றோர்கள் இதை கண்காணித்து மாற்ற வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago