முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்னிக்கோ னேந்தலில் சரத்குமார் - கிருஷ்ணசாமி பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago