முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு இந்தியா ரூ. 500 கோடி உதவி

சனிக்கிழமை, 2 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். - 3 - இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ரூ. 500 கோடியை இலவசமாக வழங்குகிறது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ. 210 கோடி கூடுதலாகும். இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு உதவி செய்கிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 5,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இலங்கைக்கு ரூ. 500 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ. 290 கோடி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 181.84 கோடியே வழங்கப்பட்டது. ஆகவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய இலங்கை அரசு பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கை ஒரு போதும் தமிழர்களுக்கு இந்த நிதியை பயன்படுத்தாது என்றும் சிங்களவர்கள் பயன்பெறும் வகையிலே திட்டங்களை செயல்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளன. இந்த நிதியால் கட்டப்படும் விடுதிகளில் சிங்களவர்களைத்தான் இலங்கை அரசு குடியமர்த்தும் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் எழுப்ப அ.தி.மு.க, தி.மு.க, வ. கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் தீர்மானித்துள்ளன. இலங்கைக்கு மட்டுமல்லாது, வங்கதேசம், பூடான், மியான்மர், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு மானிய நிதி வழங்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இந்த முறை ரூ. 548 கோடி வழங்கப்படுகிறது. வங்க தேசத்திற்கு ரூ. 580 கோடி கொடுக்கப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago