முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் கைபார உற்சவம்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், மார்ச்.15 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி திருவிழா 5-ஆம் நாள் விழாவாக சுவாமி தெய்வானையுடன் யானை வாகனத்தில் எழுந்கபுளும் கைபார நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் கோயிலில் கடந்த மார்ச் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது. தினமும் காலையில் சுவாமி தெய்வானையுடன் தங்கப்பல்லக்கிலும், மாலையில், தங்கமயில் வாகனம், தங்கக்குதிரை வாகனம், அன்னவாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கலிலும் எழுந்தருளின. 5-ஆம் நாள் கைபார நிகழ்ச்சி நடைபெற்றது. இது முழுக்க முழுக்க கிராமத்தினறால் கொண்டாடப்படும் விழாவாகும்.

இதனையொட்டி மேலரதவீதி சந்திப்பிலிருந்து கோயில் வாசல் வரை பக்தர்கள் தங்கள் உள்ளங்கைகளில் சுவாமி, தெய்வானை எழுந்தருளிய யானை வாகனத்தை சுமந்தபடி ஓட்டமும், நடையுமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து சொக்கநாதர் கோயில் முன்பு நக்கீரர் லீலை நடைபெற்றது. இதனையடுத்து நகரின் முக்கிய வீதிகளில் விநாயகர், அண்டாபரனர், நக்கீர்ர ஆகியோர் சப்பரத்திலும், வெள்ளியானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனும்ம வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆண்டுக்கொருமுறை பங்குனிப் பெருவிழாவில் மட்டுமே யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவது குறிப்பிட்டத்தக்கது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 17-ஆம் தேதி பங்குனி உத்திரமும், 19-ஆம் தேதி பட்டாப்ஷேகமும், 20-ஆம் தேதி திருக்கல்யானமும், 21-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்