முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் உயரமான கோவில்: அடிக்கல் நாட்டினார் அகிலேஷ்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

பிருந்தாவன், மார்ச் 18 - நாட்டின் உயரமான கோவில் 70 நிலைகளுடன் உத்தப்பிரதேசத்தில் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நாட்டினார்.

மதுரா மாவட்டம் பிருந்தாவன் பகுதியில் 213 மீட்டர் உயரத்துக்கு கட்டப்படவுள்ள அந்தக் கோவில் பணிக்கு ரூ.300 கோடிக்கு மேல் செலவிடப்பட உள்ளது. இந்தப் பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவைடையும். இது உலகத்திலேயே மிகவும் உயரமான கோவிலாக இருக்கும். இங்கு கோவில் சுவருகளில் கிருஷிணரின் போதனைகள் இடம் பெறும்  என்று அதன் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கு கிருஷ்ணர்-ராதையை நினைவு படுத்தும் வகையில் பூங்கா மற்றும் அருங்காட்சியகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த கோவில் அமைந்துள்ள பகுதி முழுமதையும் பார்க்கும் விதமாக கோபுரத்தின் உச்சியில் தொலை நோக்கி அமைக்கப்பட உள்ளது, என்று கோவில் நிர்வாகி சஞ்சலாபதி தாஸ் தெரிவித்தார்.

அடிக்கல்லை நாட்டி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ஹோலி பண்டிகையில் தொடங்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திட்டம், மக்களிடம் அன்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவை பரவுவதை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. இந்தியாவுக்கான அடையாளமே கலாசாரம், பனமுகத்தன்மை மற்றும் பல்வேறு மதங்களால் ஒன்றிணையப் பெற்றதுதான்.

எனவே இந்தத் திட்டம் நமது உன்னத பாரம்பரியத்தை காட்டுவதுடன், அனைவரிடத்திலும் ஆன்மீகத்தை ஊக்குவிக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்