முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைப்பொருளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

மெல்போர்ன், ஏப்.13 - இந்தியாவில் திருடப்பட்டு அஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிவன் சிலை, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படாவிட்டால் இருநாடுகளுக்கிடையேயான கலாசார உறவுகள் பாதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதராக 1991-ஆம் ஆண்டு பதவி வகித்த பெரா வெல்ஸ், இதுகுறித்து கூறியதாவது: 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தச் சிலை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, அதற்குரிய இடமான தமிழ்நாட்டில் உள்ள கோவிலில் வைக்கப்பட வேண்டும். இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தலை, அடுத்து ஹிந்து மதத்தை வலியுறுத்தும் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தச் சிலையை நாங்கள் திரும்ப ஒப்படைப்பது முக்கியமானதாகும் என்று பெரா வெல்ஸ் கூறினார். வெண்கலத்தான் ஆன நடனமாடும் சிவன் சிலை ஒன்றை இந்திய கலைப்பொருள் வர்த்தகரான சுபாஷ் கபூரிடம் இருந்து ஆஸ்திரேலிய தேசிய கலைப்பொருள் கூடம் வாங்கியது.

அது இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சிலை என்று தற்போது தெரிய வந்ததையடுத்து, ஆஸ்திரேலிய கலைக்கூடத்தில் இருந்து அந்தச் சிலை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுபாஷ் கபூர் மீது தொடரப்பட்ட வழக்கில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்