முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தில் மாறுதல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.16 - முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தில் சிறிய மாறுதல் செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் ஜெயலலிதா மார்ச் 3_ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போதுமுதலமைச்சர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:_

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா, கடந்த 3.3.2014 முதல் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் <டுபட்டு வருகின்றார். 

இந்நிலையில், தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, வருகின்ற 17.4.2014 முதல் 21.4.2014 வரை அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, கழக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

17.04.2014, வியாழன்: கிருஷ்ணகிரி _ பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி  தருமபுரி _ தருமபுரி__பென்னாகரம் சாலை, மேம்பாலம் அருகில், தருமபுரி. சென்னை வடக்கு, மத்திய சென்னை, சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி:_

 

19.4.2014 _ சனிக் கிழமை: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி    போயஸ் கார்டன், கோட்டூர்புரம், மீனம்பாக்கம், ஏ.எம். ஜெயின் காலேஜ் சுரங்கப் பாதை, 1.  எம்.ஜி.ஆர். சிலை அருகில் (நங்கநல்லூர்) பேசும் இடம் _ 4_ஆவது பிரதான சாலை, 2. ஆலந்தூர் தாலுகா அலுவலகம் (பழவந்தாங்கல்) பேசும் இடம் _ தில்லை கங்கா நகர், 3.  ஆலந்தூர் நீதிமன்றம் அருகில் பேசும் இடம் _ மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி  கிண்டி, அசோக் பில்லர், எம்எம்டிஏ காலனி மெயின் ரோடு, 4.  ரசாக் கார்டன் சந்திப்பு பேசும் இடம் _  பூவிருந்தவல்லி சாலை, நியூ ஆவடி சாலை, அயனாவரம் சாலை, கெல்லீஸ் பாலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை மேம்பாலம், சூளை நெடுஞ்சாலை, 5.  சூளை தபால் நிலையம் பேசும் இடம் _  சைடன் ஆம்ஸ் சாலை, யானை கவுனி பாலம், 6.  வால்டாக்ஸ் சாலை சந்திப்பு பேசும் இடம் _  பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சென்ட்ரல்,  அண்ணா சிலை, வாலாஜா சாலை, 7.  திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு பேசும் இடம் _  நடேசன் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, போயஸ் கார்டன். 

 

20.4.2014 _ ஞாயிற்றுக் கிழமை: சென்னை வடக்கு மக்களவைத் தொகுதி _ போயஸ் கார்டன், ராயபுரம் மேம்பாலம்,  எண்ணூர் நெடுஞ்சாலை, 1.  திருவொற்றியூர் தேரடி பேசும் இடம் _  டோல்கேட், தண்டையார்பேட்டை,  எண்ணூர் நெடுஞ்சாலை, 2.  மணலி நெடுஞ்சாலை சந்திப்பு பேசும் இடம் _  கிருஷ்ணமூர்த்தி இணைப்புச் சாலை, 3.  சத்தியமூர்த்தி நகர் பேசும் இடம் _  எம்கேபி நகர், மத்திய நிழற் சாலை,  எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூர்த்திங்கர் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, 4.  பெரவள்ள?ர் சந்திப்பு பேசும் இடம் _  பெரம்பூர் நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, போயஸ் கார்டன்.

 

21.4.2014 _ திங்கட் கிழமை: சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதி,  போயஸ் கார்டன், காந்தி சிலை,  சாந்தோம் நெடுஞ்சாலை, எல்.பி. ரோடு, 1.  கந்தன்சாவடி காளியம்மன் கோயில் பஸ் ஸ்டாப் ( பெருங்குடி ) பேசும் இடம் _  டைடல் பார்க், வேளச்சேரி ரோடு, பனகல் மாளிகை, 2.  ஐந்து விளக்கு பேசும் இடம் _  ஜோன்ஸ் ரோடு, கே.கே. நகர், 3.  எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் (100 அடி ரோடு) பேசும் இடம் _  உதயம் தியேட்டர், அரங்கநாதன் சுரங்கப் பாலம்,  நியூ போக் ரோடு, முத்துரங்கன் சாலை, 4.  தியாகராயநகர் பேருந்து நிலையம் பேசும் இடம் _ தேவர் சிலை, டிடிகே சாலை, போயஸ் கார்டன்.

 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்