முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமீறல் குறித்து இதுவரை 62,400 புகார்கள்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தேர்தல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 62,240 புகார்கள் வந்துள்ளன என தமிழக தலைமைத் தேர்தல் அதி காரி பிரவீண்குமார் கூறினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 

தமிழகத்தில் மக்களவைத் தேர் தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக வைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், பின்னர் ரேண்டம் முறை யில் பூத்களுக்கு தேர்வு செய்து அனுப்பப்படும். சில தொகுதிகளில் அதிக வேட் பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட் டுள்ளது. பற்றாக்குறையைப் போக்க ஹைதராபாத்தில் இருந்து 2013 புதிய இயந்திரங்கள் வரவழைக்கப்படு கின்றன. 

தேர்தல் விதி மீறல்கள் குறித்து புகார் தெரிவிப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. புகார்களைப் பெறுவதற்காக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப் பாட்டு அறைக்கு (1950), இதுவரை 62,240 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 8,616 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரம் வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங் கும் பணிகளில் தொய்வு எதுவும் ஏற்படவில்லை. எந்தெந்த பகுதிகளில், எப்படி விநியோகிப்பது என்பது பற்றி ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பூத் சிலிப்புகள், வரும் 19-ம் தேதிக்குள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். பூத் சிலிப் விநியோகிக்கும்போது, வேண்டுமானால் அரசியல் கட்சியினர் உடன் செல்லலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்