முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுடுகாட்டு ஊழல் வழக்கு: தி.மு.க. செல்வகணபதிக்கு ஜெயில்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப்.18 - தமிழகத்தில் 1991 முதல் 1996_ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. அப்போது, மத்திய அரசு திட்டமான ஜவஹர் யோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதிகளை கொண்டு தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது.
இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனடிப்படையில், 1996_ம் ஆண்டு சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தது.
இதை தொடர்ந்து, இந்த வழக்கில் அப்போதைய உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த செல்வகணபதி, அந்த துறையின் செயலாளர் ஆச்சாரியலு, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் சத்தியமூர்த்தி, திட்ட அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுத்துறை சிறப்பு அதிகாரி ஆரோக்கியராஜ், தனியார் ஒப்பந்ததாரர் பாரதி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறப்பு அதிகாரி ஆரோக்கியராஜ் மரண மடைந்தார். இதையடுத்து, செல்வகணபதி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மாலதி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், 'மத்திய அரசு நிதியின் மூலம் சுடுகாடுகளில் கூரை அமைக்கும் திட்டத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட (அப்போதைய அமைச்சர்) செல்வகணபதி, ஆச்சாரியலு, சத்திய மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50 ஆயிரமும், பாரதிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்' என்று நீதிபதி கூறியுள்ளார்.
ஜெயில் தண்டனை 2 ஆண்டு என்பதால், தண்டனை பெற்ற செல்வகணபதி உள்ளிட்ட 5 பேர் உடனடியாக ஜெயிலுக்கு செல்ல வேண்டியது இல்லை. அவர்கள், இந்த தீர்ப்பை எதிர்த்து 2 மாதங்களுக்குள் அவர்கள் அப்பீல் செய்யவேண்டும். அதுவரை இந்த ஜெயில் தண்டனை நிறுத்தி வைக்கப்படும்.
அதேபோல, இந்த வழக்கில் ஜெயில் தண்டனை பெற்றுள்ள செல்வகணபதி, அ.தி.மு.க.வில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வுக்கு மாறினார். தற்போது, அவர் தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்