முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10ம் வகுப்பு அறிவியல் தேர்வில் 3 மதிப்பெண்: தேர்வுத்துறை

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப்.18 - பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் 2 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தது. கடந்த 7_ந்தேதி நடந்த இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதி கேள்வி எண் 14_ல், ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் 1/3 எனில் ஆடியின் வகை என்ன என கேட்கப்பட்டது.
இதற்கு 'குவிலென்ஸ்' என்பது விடை. ஆனால் 'குழிலென்ஸ்' என்ற வேறொரு விடையும் உள்ளது. எந்த கேள்விக்கு எந்த பதிலை எழுதி இருந்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இரு மதிப்பெண் பகுதி, தமிழ் வழி கேள்வி எண்.29_ல் வாகனங்களில் பயன் படுத்தப்படும் எரிபொருள் யாவை ...... என்ற கேள்விக்கு, ஆங்கில வழி கேள்வித்தாளில் பயோ_பியூல் என கேட்டு தமிழ் வழி கேள்வித்தாளில் 'உயிரி எரிபொருள்' என கேட்காமல் பொதுவாக கேட்டு விட்டனர்.
இதற்கு மாணவர்கள், பெட்ரோல்_டீசல் என விடை எழுதினர். இதனால் மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது.
இந்த நிலையில் இந்த கேள்விக்கு 2 மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்