முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுப் பணத்தை சூறையாடுவதே குஜராத்தின் வளர்ச்சி

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable


பாட்னா, ஏப்.18 - பொதுப்பணத்தை சூறையாடுவதே
குஜராத்தின் வளர்ச்சி மாடல் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக பேசினார்.
பிகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
குஜராத் வளர்ச்சி மாடல் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பொருந்தாது. மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள். குஜராத் வளர்சி மாடலை மிட்டாய் மாடல் அல்லது பலூன் மாடல் என்றும் அழைக்கலாம். டாடா, அதானி போன்ற பணக்காரர்களுக்காக பயனளிக்கும் வகையில் பொதுப் பணத்தை சூறையாடுவதே இந்த மாடல். மோடி அடுத்த பிரதமராக வருவதற்காக பாஜக இந்த கருத்தை விற்பனை செய்து வருகிறது.
ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.1 விலைக்கு தொழிலதிபர் அதானிக்கு நரேந்திர மோடி கொடுத்துள்ளார். இந்த 1 ரூபாய் ஒரு மிட்டாயின் விலை.
டாடா மோட் டார்ஸ் நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை தொடங்குவதற்கு மோடி ரூ.10 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளார். வங்கியில் 12 சதவீத வட்டிக்கு சாதாரண மனிதர்கள் கடன் பெற்றுவரும் நிலையில் இந்தத் தொகையை அவர் 0.1% வட்டிக்கு தந்துள்ளார்.
ஒவ்வொரு நானோ காருக்கும் குஜராத் அரசு ரூ.40 ஆயிரம் உதவி அளிக்கிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் பிற நலத் திட்டங்களுக்கு குஜராத் அரசின் செலவு இந்த ரூ.10 ஆயிரம் கோடியை விட குறைவு.
குஜராத்தில் 40 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களின் ஒரு நாள் வருமானம் 11 ரூபாயை விட குறைவு. குஜராத் வளர்ச்சியில் தன்னைத் தவிர வேறுயாரின் பங்களிப்பும் இல்லை என்று மோடி கூறுகிறார். நாட்டின் எல்லா பகுதிகளின் வளர்ச்சிக்கும் மோடி இனி இதையே கூறுவார்” என்றார் ராகுல்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்