முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணை மூடிக் கொண்டு மோடியை நம்பாதீர்கள்: கெஜ்ரிவால்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

வாரணாசி, ஏப் 21 - உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 

மோடிக்கு கிடைக்கும் ஓட்டுக்களை குறைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கெஜ்ரிவால் வாரணாசியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். வாரணாசி அருகே உள்ள ராம்நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, 

நான் ஒரு கிராமத்துக்கு பிரச்சாரம் செய்ய சென்றேன். என்னை பார்த்ததும் சில இளைஞர்கள் மோடி, மோடி என்று கோஷமிட்டனர். நான் அவர்களிடம் மோடி ஏன் பிரதமராக வேண்டும் என்று கேட்டேன். அந்த இளைஞர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்களிடம் நான் விலைவாசி உயர்வு பிரச்சினையை ஆதாரங்களுடன் எடுத்து கூறினேன். 

தற்போது அந்த இளைஞர்கள் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர். பத்திரிகைகள் தான் மோடியை பற்றிய மாயையை ஏற்படுத்தி விட்டன. எனவே கண்ணை மூடிக் கொண்டு மோடியை நம்பாதீர்கள். மோடி பற்றிய உண்மை தெரியாமல் அறிவை இழந்து விடாதீர்கள். கண்மூடித்தனமாக மோடியை ஆதரித்தால் பின்னால் வருத்தப்படுவீர்கள். 

என்னை முதல் மந்திரி பதவியில் பாஜக, காங்கிரஸ்காரர்கள் 49 நாட்கள்தான் உட்கார விட்டனர். அப்போது அவசரப்பட்டு ராஜினாமா செய்து விட்டேன். முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இந்த மண்ணில் பிறந்தவர். கொள்கையுடன் வாழ்ந்த அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் போல் தேவைப்பட்டால் 100 தடவை கூட ராஜினாமா செய்ய நான் தயங்க மாட்டேன். 

நான் ஆட்சிக்கு வந்தால் ஊழல், லஞ்சம் ஒழிக்க பாடுபடுவேன். என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் தர்ணா செய்து கியாஸ் விலை ஏற்றப்படாமல் பார்த்து கொள்வேன். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்