முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுமுறை அளிக்காத 5 ஐ.டி. நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஏப்.25 - சென்னையில், ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளிக்காத விப்ரோ உள்ளிட்ட 5 ஐ.டி. நிறுவனங்கள் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், சென்னையில் விப்ரோ, ஹெ.சி.எல்., டெக் மகிந்திரா, சொடெக்ஸோ உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் இன்றும் வழக்கம் போல் செயல்பட்டன.

சோழிங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் ஆர். ஜெயந்தி தேர்தல் ஆணைய உத்தரவை மீறி இந்நிறுவனங்கள் இயங்கியதாக தெரிவித்தார்.

மேலும், அங்கு பணிபுரிந்த சுமார் 3,500 ஊழியர்களையும் காவல்துறையினர் உதவியுடன் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

தேர்தல் ஆணைய உத்தரவை மீறியதாக 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்