முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பயில் டிக்கெட் வாங்கும் போதே தரிசன நேரம் ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, ஜூன் 28 - திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி வருகிறது.

இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அதிகபட்சமாக 20 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. தரிசனத்துக்காக அவர்கள் கியூவில் காத்து நிற்க வேண்டியது உள்ளது. 300 ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட் எடுப்பவர்கள் கூட மணிக்கணக்கில் காத்து நின்றுதான் ஏழுமலையானை தரிசிக்க முடிகிறது.

திருப்பதி கோவிலில் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெறுகிறார்கள். இதற்கான கவுன்டர் காலை 7 மணிக்குத்தான் திறக்கப்படுகிறது. ஆனாலும் டிக்கெட் பெற நள்ளிரவு முதலே பக்தர்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுகிறார்கள். வரிசையில் நின்றவர்களால் வெளியே வர முடியாது. இயற்கை உபாதைகளை கழிக்க கூட அந்த வரிசையில் எந்த வசதியும் கிடையாது. இந்த அவதியை களைய தேவஸ்தானம் புதிய நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

டிக்கெட் எடுக்கும் போதே அந்த டிக்கெட்டில் தரிசன நேரம் குறிப்பிட்டு வழங்கப்படும். டிக்கெட்டை பெற்றவர்கள் குறிப்பிட்ட அந்த நேரத்தில் வைகுண்டம் 1வது வரிசையில் வந்து நின்றால் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இடைப்பட்ட நேரங்களில் அவர்கள் ஓய்வு எடுக்கலாம். அல்லது மற்ற கோவில்கள் தரிசனத்துக்கு செல்லலாம். இதற்கான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டதும் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் முதலில் 300 ரூபாய் சிறப்பு கட்டண வரிசையில் அமல்படுத்தப்படும் என்றும் பின்னர் தர்ம தரிசன வரிசைக்கு அமல்படுத்தப்படும் என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்