முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாணவர்களுக்கு கல்வி உதவி கிடையாதாம்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஜூலை.25 - ஆந்திராவில் என்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரியில் படிக்கும் பிறபடுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கடந்த காங்கிரஸ் அரசு நிதி உதவி வழங்கி வந்தது.

இப்போது ஆந்திரா, தெலுங்கானா என மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு 2 மாநிலத்துக்குப தனித்தனி முதல்-மந்திரிகள் பதவி ஏற்று உள்ளனர். தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் படிக்கும் ஆந்திர மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படாது என்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

1956-ஆம் ஆண்டு முதல் ஐதராபாத்தில் வசிப்பவர்களே தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கருதப்படும். எனவே அவர்களுக்கு மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

7 ஆண்டுகள் ஒரு மாநிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அந்த மாநில குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு அரசின் சலுகைகள் வழங்க வேண்டும் என்று சட்டம் இருக்கும் போது சந்திரசேகரராவின் இந்த அறிவிப்பு ஆந்திர மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்